Important Hadees
ஒருவர்
தம் மனைவியுடன் குளிப்பது
250 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதா வது:
நானும் நபி (ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்திலிருந்து (தண்ணீர் அள்ளி)
குளித்தோம். அந்தப் பாத்திரத்திற்கு ஃபரக் என்று கூறப்படும்.5
இந்த ஹதீஸ் முஸ்லிம்,(531,532)
இந்த
ஹதீஸ் புகாரி,250
ஆண்-பெண் பாலுறுப்புகள் சந்தித்து விட்டால்...
291
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர்
தம் மனைவியின் (இரு கைகள் இரு கால்கள் ஆகிய) நான்கு கிளைகளுக் கிடையில் அமர்ந்து
பின்னர் அவள்மீது தமது வலிமையைக் காட்டிவிட்டாலே குளியல் கடமையாகிவிடும்.55
இதை
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இதே
ஹதீஸ், நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
புகாரி,291
குளியல்
கடமையானவர் உறங்குவது
287 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறிய தாவது
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களிடம், உமர்
பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள்,
"எங்களுள்
ஒருவர் குளியல் கடமையானவராக (பெருந்துடக்குடன்) இருக்கும் நிலையில் உறங்கலாமா?" என்று கேட்டார்கள் அதற்கு அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள், "ஆம்; உங்களுள்
ஒருவர் குளியல் கடமையானவராக (பெருந்துடக்குடன்) இருந்தாலும் அவர் 'உளூ' செய்துவிட்டு
உறங்கலாம்" என்று பதிலளித்தார்கள் 51
ஆண்-பெண்
பாலுறுப்புகள் சந்தித்து விட்டால்...
291 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் தம் மனைவியின் (இரு கைகள் இரு கால்கள் ஆகிய) நான்கு கிளைகளுக்
கிடையில் அமர்ந்து பின்னர் அவள்மீது தமது வலிமையைக் காட்டிவிட்டாலே குளியல்
கடமையாகிவிடும்.55
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இதே ஹதீஸ், நான்கு அறிவிப்பாளர் தொடர்களில்
வந்துள்ளது.
புகாரி,291
293 உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவுகொண்டார்; ஆனால் விந்தை வெளியேற்றவில்லை (இந்நிலையில் அவர்மீது குளியல் கடமையாகுமா?)" என்று கேட்டேன்
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "மனைவியின் பிறவி உறுப்பைத் தொட்ட தமது
உறுப்பை அவர் கழுவிக்கொள்ள வேண்டும்; பிறகு 'உளூ செய்துகொண்டு தொழலாம்" என்று
சொன்னார்கள்
புகாரி,293
அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்:
(பாலுறுப்புகள் சந்தித்துவிட்டால்) குளியல்தான் (மார்க்கத்தில்) பேணுதலான நடவடிக்கையாகும். இதுதான் இறுதிக் கட்டளையாகும். இதில் கருத்து
பெருந்துடக்கிற்காகக்
குளித்த பின்னர் இரு கைகளையும் உதறுவது
276 மைமூனா(ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்கள் குளிப்பதற்குத் தண்ணீர் வைத்துவிட்டு ஒரு
துணியால் அவர் களுக்குத் திரையிட்டேன் அவர்கள் (முதலில் மணிக்கட்டுவரை) தமது
கைகளின் மீது தண்ணீர் ஊற்றிக் கழுவினார்கள் பிறகு தமது வலக் கையால் (தண்ணீர்
அள்ளி) இடக் கரத்தில் ஊற்றி தமது மர்ம உறுப்பைக் கழுவினார்கள்; தமது (இடக்)கரத்தை பூமியில் அடித்துத்
தேய்த்தார்கள் பிறகு அ(க்கரத்)தைக் கழுவினார்கள் வாய்க் கொப்புளித்து, மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தி(ச்
சிந்தி)னார்கள் மேலும், தமது முகத்தையும் (முழங்கை மூட்டுவரை) இரு கைகளையும் கழுவினார்கள் புகாரி,287
பெண்களுக்குத் தூக்கத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டால்
282 இறைநம்பிக்கையாளர்களின் அன்னை உம்மு சலமா (ரலி) அவர்கள்
கூறியதாவது:
அபூதல்ஹா (ரலி) அவர்களின் மனைவி உம்மு சுலைம் (ரலி) அவர்கள் அல்லாஹ்
வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! சத்தியத்தைக் கூற அல்லாஹ்
வெட்கப்படுவதில்லை. பெண் ஒருத்திக்குத் தூக்கத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டால் அவள்மீது
குளியல் கடமையா?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,
“ஆம்; (விழித்தெழும்போது) அவள் (மதன) நீரைக்
கண்டால் (குளியல் அவள்மீது கடமைதான்)” என்று பதிலளித்தார்கள்
புகாரி,282
130 உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(அபூதல்ஹா (ரலி) அவர்களின் மனைவி) உம்மு கலைம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து," அல்லாஹ்வின் தூதரே! சத்தியத்தைச் சொல்ல அல்லாஹ் வெட்கப்படுவதில்லை பெண்ணொருத் திக்கு தூக்கத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டால் அவள் மீது குளியல் கடமையாகுமா?" என்று கேட்டார் அதற்கு நபி (ஸல்) அவர் கள், "(ஆம்! உறங்கி விழித்ததும் தன்மீது) அவள் (மதன) நீரைப் பார்த்தால் (குளியல் அவள் மீது கடமைதான்)" என்று பதிலளித்தார்கள்
உடனே நான் (வெட்கத்தால்) எனது முகத்தை மூடிக்கொண்டு, "பெண்களுக்கும் ஸ்கலிதம் ஏற்படுமா,
அல்லாஹ்வின்
தூதரே?" என்று கேட்டேன் அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உன் வலக்கரம் மண்ணைக் கவ்வட்டும்”
(நன்றாகக்
கேட்டாய், போ)!
பிறகு எவ்வாறு குழந்தை தாயின் சாயலில் பிறக்கிறது?" என்று கேட்டார்கள் 126
புகாரி,130
மாதவிடாய்
ஏற்பட்டுள்ள பெண் தன் கணவரின் தலையைக் கழுவுவதும் அவரது தலைமுடியை வாரிவிடுவதும்
295 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போதும் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு தலைவாரிவிடுவேன்'
புகாரி,295